சேலம் அருகே தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறித்தவர் கைது
போலீசார் விசாரணை;
சேலம் அருகே உள்ள மல்லூரை சேர்ந்தவர் சின்னபையன் (வயது 48), தறித்தொழிலாளி. இவர் தொழிலுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆட்டையாம்பட்டி பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சத்யராஜ் (31) என்பவர் அவரை வழிமறித்தார். பின்னர் அவர் கத்தியை காட்டி மிரட்டி சின்னபையனிடம் இருந்து ரூ.1,000 பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று சத்யராஜை கைது செய்தனர்.