அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்;

Update: 2025-08-12 04:01 GMT
அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த 6 மாத காலமாக நடைபெற்று வருகிறது. சேலம் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி ஆகிய 8 சட்டசபை தொகுதிகளில் இளைஞர் இளம்பெண்கள் பாசறைக்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது முதல் கட்டமாக 100 பேருக்கு உறுப்பினர் அட்டையை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய உறுப்பினர்களுக்கு வழங்கினார். இதில் அமைப்பு செயலாளர் செம்மலை, புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வி.பி.பி.பரமசிவம், எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, ஜெயசங்கரன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் வாசுதேவன் மற்றும் பாசறை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News