சாலை புறநானிக்கும் பணி தீவிரம்

விரைந்து முடிக்க கோரிக்கை;

Update: 2025-08-18 16:03 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள லம்ஸ் ராக் டால்பினோஸ் செல்லும் சாலை நகராட்சி சார்பாக 1.5கிலோமீட்டர் தூரத்திற்கு புரணமைக்கும் பணி தரம் இல்லாமல் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்....... குன்னூர் அருகே உள்ள சுற்றுலா தளமான லாம்ஸ்சராக் டால்பினோஸ் காட்சி முனைகள் மற்றும் ஆர்டர்லி செல்லும் சாலை நகராட்சி சார்பாக புரணமைப்பு பணி இன்று துவங்கப்பட்டது ஏற்கனவே இன்டெர் லாக் கற்கள் பதிக்கப்பட்ட பகுதியில் காங்கிரீட் போட்டு சாலை அமைப்பதால் தரம் இல்லாத பணி நடப்பதாகவும் மேலும் விரைவில் சாலை பெயர்ந்து விடும் எனவும் தரமான சாலை அமைத்து தர வேண்டும் எனவும் சாலைப் பணி மேற்கொள்ள 20 நாட்கள் சாலை மூடப்படுவதால் ஆர்டர்லி கரன்சி சேம்பக்கரை பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் மேலும் சுற்றுலாத்தலமான லாம்ஸ்ராக் டால்பினோஸ் காட்சி முனைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் அப்பகுதியில் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் நகராட்சி நிர்வாகம் சார்பாக சாலைப் பணி மேற்கொள்ளும் இடத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாமல் ஒப்பந்ததாரர் மட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார் எனவே நகராட்சி நிர்வாகம் சார்பாக அதிகாரிகளை நியமித்து தரமான சாலை பணி மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News