விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைப்பெறுவதையொட்டி கோத்தகிரி யில் இன்று காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது....

நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்;

Update: 2025-08-18 16:06 GMT
நீலகிரி விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைப்பெறுவதையொட்டி கோத்தகிரி யில் இன்று காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.... எதிர் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டும் அதனை தொடர்ந்து விநாயகர் சிலைகளை கரைக்க முக்கிய சாலைகளில் ஊர்வலமாக எடுத்து செல்வதாலும் நீலகிரி மாவட்டம் பதற்றமான மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டத்தில் இருந்து 30 பேர் கொண்ட விரைவுப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா அறிவுறுத்தலின் படி கோத்தகிரி காவல்துறை ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பு காமராஜர் சதுக்கம், பேருந்து நிலையம், கடைவீதி சாலை போன்ற முக்கிய சாலைகளின் வழியாக சென்று கோத்தகிரி காந்தி மைதானம் சென்றடைந்தது

Similar News