கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்மலை
முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள மாயாற்றில் வெள்ளப்பெருக்கு;
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்திற்கு மேல் மழை வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது....... நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையானது பெய்து வருகிறது. இதனால் சிறு சிறு ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறுகளில் மழை வெள்ளப்பருக்கானது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் நேற்று மதியம் முதல் மழையின் தகவல் தீவிரமடைந்து காணப்பட்டு வரும் நிலையில் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள மாயாற்றில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டு கரைபுரண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் மாயாற்றில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலத்திற்கு வெள்ள நீரானது செல்கிறது. இதனால் தெங்குமராஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட கரையோரம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாயாற்றில் தொடர்ந்து நீர்வரத்தானது அதிகரித்து காணப்படும் நிலையில் இந்த நீர் நேரடியாக ஈரோடு மாவட்டம் பாவனிசேகர் ஆற்றிற்கு நேரடியாக செல்வது குறிப்பிடத்தக்கது.