வனத்துறைக்குப் போக்கு காட்டிய கரடி
வீட்டிற்குள் கரடி நுழைந்ததால் அலறி அடித்து வெளியேறிய குடியிருப்பு வாசிகள்;
நீலகிரி கூடலூர் அடுத்த மசினகுடி அருகே இந்திரா நகர் பகுதியில் வீட்டிற்குள் கரடி நுழைந்ததால் அலறி அடித்து வெளியேறிய குடியிருப்பு வாசிகள், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கரடியை விரட்ட முயன்றபோது வீட்டின் வேலியை தாண்டி தலைக்குப்புற குதித்து தெரித்து ஓடியது..... நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளிமண்டல வனப் பகுதியில் அமைந்துள்ள மசினகுடி பகுதியில் பகல் நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி இந்திராநகர் பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்தது. இதனை அறிந்த வீட்டுற்குள் இருந்த நபர்கள் உடனடியாக வெளியேறி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரமாக போராடி வீட்டிற்குள் இருந்த கரடியை வெளியேற்றினர். அப்போது வீட்டின் அருகே இருந்த தடுப்பு வேலியை தண்டி தலைகுப்புற கவிழ்ந்து தெரித்து ஓடியது. பின்னர் அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் நுழைய முயன்ற நிலையில் வனத்துறையினர் கரடியை வனப் பகுதிக்கு விரட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.