நீலகிரி மாவட்ட அரசு காஜியாக முஃப்தி முஜிபூர் ரஹ்மான் அவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர் இடம் வாழ்த்து;
நீலகிரி மாவட்ட அரசு காஜியாக முஃப்தி முஜிபூர் ரஹ்மான் அவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, தன்னை பரிந்துரை செய்தமைக்காக நன்றி தெரிவித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், ஐக்கிய ஜமாத் தலைவர் ஜம்ஜம் முபாரக், குன்னூர் நகர கிளை செயலாளர் - ஐக்கிய ஜமாத் ஆலோசகர் ரஹீம், துணை தலைவர் முஸ்தபா ஆகியோர் உள்ளனர்.