நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு வளர்ப்பு நாயை வேட்டையாடி இழுத்துச் சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வைரல்....... நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் குறிப்பாக சிறுத்தை கரடி கருஞ்சிறுத்தை புலி போன்றவை இரவு மற்றும் பகல் வேலைகளில் இரைதடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு உதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பால் என்பவருக்கு சொந்தமான ஜெர்மன் ஷெப்பர்ட் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது எனவே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.