ஊட்டியில் அரசு பேருந்துகளால் விபத்துகள் அதிகரிப்பு

ஒரே மாதத்தில் மூன்று சம்பவங்கள் – ஏடிசி பகுதியில் இரண்டாம் விபத்து, பொதுமக்கள் அச்சம்;

Update: 2025-08-19 14:57 GMT
ஊட்டியில் அரசு பேருந்துகளால் விபத்துகள் அதிகரிப்பு ஒரே மாதத்தில் மூன்று சம்பவங்கள் – ஏடிசி பகுதியில் இரண்டாம் விபத்து, பொதுமக்கள் அச்சம் ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில், அரசு பேருந்துகள் அடிக்கடி பொதுமக்கள்மீது மோதி விபத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது இதில் சிக்கும் பொதுமக்கள் உயிர் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு மாத காலத்தில் மூன்று பேருந்து விபத்துகள் பதிவாகியுள்ளன என்பது கவலைக்குரிய விசயமாக உள்ளது. ஏடிசி பகுதியில் மீண்டும் விபத்து ஊட்டியில் அதிகப் பயணிகள் பயன்படுத்தும் ஏடிசி (ATC) பகுதி சாலையில், இன்று மாலை அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதனால் சாலையோரத்தில் இருந்த ஒருவர் கடுமையாக காயமடைந்தார். அவருக்கு கால்முறிவு ஏற்பட்ட நிலையில், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதே பகுதியில் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பும் பேருந்து விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் குற்றச்சாட்டு “அரசு பேருந்துகள் ஓட்டுநர்கள் வேகமாகவும் கவனக்குறைவாகவும் செலுத்துவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. தினசரி பயணம் செய்வதே உயிர் பந்தயம் போல் உள்ளது. ஏடிசி பகுதி சாலை மிகவும் நெரிசல் அதிகம் கொண்டது. இருந்தும் எச்சரிக்கையின்றி பேருந்துகள் பாய்ந்து செல்கின்றன” என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதிகாரிகள் நடவடிக்கை விபத்து தொடர்பாக போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறை இணைந்து விசாரணை நடத்த வேண்டும் . “பேருந்து ஓட்டுநர்களுக்கு கூடுதல் எச்சரிக்கை அறிவுறுத்தப்பட வேண்டும் . மேலும் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதிகரிக்கும் அச்சம் ஒரு மாதத்திற்குள் மூன்று பேருந்து விபத்துகள், அதில் இரண்டும் ஏடிசி பகுதியில் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர். உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Similar News