தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம் வெட்டிக்காடு ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளையின் தலைவராக மஞ்சுளா, செயலாளராக வசந்தி, பொருளாளராக வெங்கடேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி, ஒன்றியச் செயலாளர் கோவி.ராதிகா, ஒன்றியத் தலைவர் துரைராஜன், ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு, சங்க நடைமுறைகளை பற்றி விளக்கிப் பேசினர்.