திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு எஸ்ஆர்எம்யு ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-09-20 00:41 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் முன்பு பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது 8ஆவது சம்பளக் கமிசன் கமிட்டியை காலதாமதமின்றி உடனடியாக நியமித்து குறிப்பு விதிமுறைகளை வெளியிட வேண்டும், 1.1.2026 முதல், புதிய சம்பள விகிதங்களை அமல்படுத்திட வேண்டும், அனைத்து காலியிடங்களையும் பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வூதியதாரர்களின் பென்ஷனை முடக்காமல் அவர்களுக்கும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும், 50வயது முடிந்த அல்லது 30ஆண்டுகள் பணி முடித்தவரை திறமையின்மை என்ற பெயரால் கட்டாய ஓய்வில் அனுப்பும் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Similar News