விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் வந்தவாசி பகுதி கோயில் நிா்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
விஷ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள் திருவேங்கடம், டி.கே.பாஸ்கா், ஜெகந்நாதன், தங்கலஷ்மி ஆகியோா் கலசங்களை கோயில் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா்.;
விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் வந்தவாசி பகுதி கோயில் நிா்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. புரட்டாசி மாத பிறப்பையொட்டி, அந்த மாதம் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து பூஜைகள் செய்வதற்காக இந்த கலசங்கள் ஒப்படைக்கப்பட்டன. வந்தவாசி பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு இந்த கலசங்கள் வழங்கப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள் திருவேங்கடம், டி.கே.பாஸ்கா், ஜெகந்நாதன், தங்கலஷ்மி ஆகியோா் கலசங்களை கோயில் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா்.