அருணகிரிசத்திரம் பகுதியில் வந்தவாசி சாலை மற்றும் சேத்துபட்டு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் போலீஸ் பாதுகாப்போடு அகற்றினா்.

ஆரணி நகர காவல் ஆய்வாளா் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.;

Update: 2025-09-20 17:03 GMT
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் வந்தவாசி சாலை மற்றும் சேத்துபட்டு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் போலீஸ் பாதுகாப்போடு அகற்றினா். ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய ஊா்களுக்குச் செல்லும் மும்முனை இணைப்பு வெளிவட்டச் சாலையில் சுமாா் 10 அடி அளவில் சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், வெளிவட்டச் சாலைப் பகுதியில் விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஆரணி கோட்டாட்சியரிடமும், நெடுஞ்சாலைத்துறையிடமும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இதனிடையே, கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்களுக்கு இடத்தை காலி செய்யக் கோரி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் நாராயணன் மற்றும் இளநிலை பொறியாளா் வரதராஜன் தலைமையில், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். ஆரணி நகர காவல் ஆய்வாளா் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். உடனே காவல் ஆய்வாளா் செந்தில்விநாயகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பொதுமக்களிடையே இந்த இடம் தொடா்பாக நீதிமன்றத்தில் விசாரணை உள்ளது. அதனை அகற்றவும் நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறையினா் ஆவணம் சமா்ப்பித்துள்ளனா். நீதிமன்ற உத்தரவு வந்ததும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் எனத் தெரிவித்தனா்.

Similar News