கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை
திண்டுக்கல் அருகே கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை;
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அடுத்த கொட்டாரப்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து வேடசந்தூர் கருப்பதேவனூரை சேர்ந்த முருகன் மனைவி பேபி(50) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் மிதந்த பேபியின் உடலை மீட்டனர்.