போலி லாட்டரி விற்ற வழக்கில் நால்வர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-09-21 15:20 GMT
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ. பிரபாகர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் ராமர் கோவில் பகுதி, பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஆகிய பகுதியில் போலி லாட்டரி விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார், வெள்ளை காகிதத்தில் நம்பர்கள் எழுதி, அதனை வெளி மாநில பரிசு சீட்டு என்று பொய் சொல்லி, போலி லாட்டரி விற்றுக்கொண்டிருந்தனர். நேரில் சென்ற போலீசார், சசிகுமார், 40, சபரி, 36, விமல்குமார், 41, கார்த்தி, 45, ஆகிய நால்வரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, போலி லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

Similar News