ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பறிமுதல்

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பறிமுதல்;

Update: 2025-09-22 02:52 GMT
திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் காச்சிக்குடா (ஹைதராபாத்) To மதுரை வரை செல்லும் வண்டி காச்சிக்குடா to மதுரை வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் வண்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் வெளி மாநில மது பாட்டில்கள் ஆகிய பொருட்களுக்கு எதிராக திண்டுக்கல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன், போலீசார் மணிமாறன், விவேக்ராஜ், லோகேஷ் ஆகியோர் சோதனை நடத்தினர். இதில் முன் பதிவு இல்லாத இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று இருந்தா பேக்கை எடுத்து சோதனை செய்து பார்த்த போது அதில் சுமார் 04 கிலோ மதிக்கத்தக்க கஞ்சா இருந்தது. அதனைத் தொடர்ந்து வேறு இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று இருந்த பேக்கை எடுத்து சோதனை செய்து பார்த்த போது அதில் சுமார் 06 கிலோ மதிக்கத்தக்க குட்கா பொருட்கள் இருந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News