திருச்சியில் பரவலாக மழை

ஞாயிற்றுக்கிழமை இரவு மாநகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது;

Update: 2025-09-22 04:12 GMT
தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திருச்சி மாநகரம் மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மேகமூட்டமாக இருந்து வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மாநகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சத்திரம், தென்னூா், உறையூா், தில்லைநகா், புத்தூா், ஜங்சன், டி.வி.எஸ். டோல்கேட், பபுத்தூா், கருமண்டபம், மத்திய பேருந்து நிலையம், காந்தி மாா்க்கெட், அரியமங்கலம், பால்பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு வரை பரவலாக மழை பெய்தது. இதனால், திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான வானிலை நிலவியது.

Similar News