திண்டுக்கல் மாவட்ட போலீசார் எச்சரிக்கை!
திண்டுக்கல் மாவட்ட போலீசார் எச்சரிக்கை!;
திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில், தினமும் விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில், "வங்கியிலிருந்து பேசுவதாகக் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாக உங்கள் செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.