காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு
திண்டுக்கல் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மீது காங்கிரஸ் மண்டல தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்;
திண்டுக்கல் மாநகராட்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் கிழக்கு மண்டல தலைவருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்திக் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மற்றும் 2 கோடி ரூபாய் பணத்தை அபகரித்துக் கொண்டு தனது வீட்டையும் அபகரிக்கும் முயற்சியில் ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாகவும் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் இருப்பதால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் மனுவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் அளித்தார். திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் கிடைக்கப்பெற்ற தகவல் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திண்டுக்கல் மாநகராட்சி 21 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் கிழக்கு மண்டல தலைவருமான கார்த்திக் கூறுகையில் நான் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்து வருகிறேன் அதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி 21 வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராகவும் இருந்து வருகிறேன் இந்நிலையில் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் என்னிடம் நான் புதியதாக எனது நிறுவனத்தின் பெயரில் வாங்கிய 24 லட்சம் மதிப்புள்ள இன்னோவா காரை சிறிது நாட்கள் பயன்படுத்தி தருகிறேன் என்று கூறியதுடன் இதன் காரணமாக நட்பு ரீதியாக எனது புதிய இனோவா காரை அவருக்கு வழங்கினேன் ஆனால் தற்போது வரை எனது இனோவா காரை திருப்பித் தராமலும் அதேபோல் கடந்த சில வருடங்களாக என்னிடம் போன் பே மூலமாகவும் நேரடியாகவும் சிறுக சிறுக சுமார் 2 கோடி ரூபாய் பணத்தையும் வாங்கிக்கொண்டு மேலும் நான் 40 லட்சம் ரூபாய் கொடுத்து எனது பெயரில் பதிவு செய்யப்பட்டு வாங்கிய வீட்டையும் அபகரிக்கும் நோக்கிடனும் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக என்னை மிரட்டுவதும் வாகனத்தை கேட்டால் தர முடியாது என்று கூறியும் எனது பணத்தையும் தர முடியாது என்றும் மேலும் பாலகிருஷ்ணாபுரத்தில் எனக்கு பாத்தியப்பட்ட வீட்டிற்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் அபகரிக்கும் நோக்குடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் அதேபோல் நேற்று எனது வீட்டிற்கு வந்து எனது தாய் தந்தையர் எனது மனைவி மற்றும் எனது பெண் குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாகவும் நீ பணம் வீடு வாகனத்தைக் கேட்கக் கூடாது என தொடர்ந்து மிரட்டி வருகிறார் இந்நிலையில் நேற்று நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை இன்று காலையிலேயே எனது வீட்டிற்கு வந்து எனது தாய் தந்தையர் மற்றும் மனைவி குழந்தைகளை மிரட்டுகிறார் இரண்டு பெண் குழந்தைகளையும் கழுத்தை அறுத்து தூக்கி எறிந்து விடுவேன் இன்று ரவுடிகளை வைத்து மிரட்டி வருகிறார் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வரும் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் மனு அளித்ததாகவும் எனக்கும் எனது மனைவி குழந்தைகள் எனது தாய் தந்தைக்கு என்ன நடந்தாலும் அதற்கு காரணம் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துறை மணிகண்டன் தான் என கூறினார் இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்தி செய்தியாளர்களிடம் இருந்து கொண்டிருந்த பொழுது திண்டுக்கல் மாவட்டம் மாநகர தலைவர் துரை மணிகண்டன் நேரடியாக வந்தார். வந்தவர் கார்த்திக்கின் அப்பாவிடம் கேட்டு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் பணம் நான் தான் கொடுத்தேன் என்று கூறினார் கார்த்தியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறும் பொழுது கடந்த ஒன்றை வருடமாக நிறுவனத்திற்கு செல்லவில்லை வரவு செலவு எனக்கு தெரியாது நேற்று மணிகண்டன் சொன்னார். இதன் காரணமாகவே வந்தேன் என்று கூறினார் இந்நிலையில் கார்த்தி தான் வாங்கிய வாகனம் மற்றும் வீடு உள்ளிட்ட அனைத்துக்கும் ஆவணம் உள்ளது தற்போது வரை நான் தான் பணம் கட்டுகிறேன் எனது தந்தையையும் மிரட்டி தற்போது அழைத்து வந்துள்ளன எனக்கு என்ன நடந்தாலும் எனது குடும்பத்திற்கு என்ன நடந்தாலும் அதற்கு பொறுப்பு மணிகண்டன் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே கூறிவிட்டுச் சென்றார்.