எஸ் எஸ் எம் பொறியியல் கல்லூரியில் சங்கமம் நிகழ்ச்சி பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பங்கேற்பு
நான் தற்போது தான் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக உள்ளதாகவும், உரிய கதை கிடைத்தால் விக்ரம் பிரபுவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும், குட் பேட் அக்லி படத்தின்;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவிகளின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் சங்கமம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். தனியார் கல்லூரியின் தாளாளர் எம் எஸ் மதிவாணன் கலந்து கொண்டு பேசுகையில் ஆதிக் ரவிச்சந்திரன் தனது குடும்ப உறவினர் என்றும், அவரின் உண்மையான பெயர் அதியமான் என்றும் தனது திரைப்படத் துறைக்காக ஆதிக் ரவிச்சந்திரன் என மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்தார். திரைப்பட இசைக்கு தகுந்தவாறு மாணவ மாணவிகளின் நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் குழு நடனம், தனி நடனம் என பல்வேறு தரவரிசையில் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை காட்டினார். இதில் சிறப்பாக நடனம் ஆடிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், நான் தற்பொழுது தான் வளர்ந்து வரும் ஒரு இயக்குனராக உள்ளேன். இப்பொழுது அஜித் குமாருக்காக ஒரு திரைப்படம் உருவாக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன். விரைவில் படப்பிடிப்பிற்கு செல்ல உள்ளதாக தெரிவித்தார். மேலும் மலையாள சினிமா குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் மலையாளத்தில் அவர்கள் கன்டென்ட் பேஸ்டு திரைப்படங்களை உருவாக்குவதாகவும் தமிழில் கமர்சியல் திரைக்கதைகள் உருவாக்குவதாகவும் மேலும் மக்களுக்கு தேவை என்னவோ அதை செய்கிறோம் எனவும் கூறினார்.