தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு பள்ளியில் தங்கி பயிலும் மாணவர்களை மழையில் நனைந்தபடி சேர், பெஞ்சுகளை தூக்க வைத்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு;

Update: 2025-09-22 18:59 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீரிமலை பகுதியில் உள்ள தாண்டிக்குடி பகுதியில் அரசு உதவி பெறும் நாகம்மாள் உயர்நிலைப்பள்ளி உள்ளது பள்ளியில் தாண்டிக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதி மற்றும் வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர் மேலும் மாணவர்கள் தங்குவதற்காக தமிழக அரசால் ஆதிதிராவிடர் தங்கும் மாணவர் விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆறு மாணவர்கள் தங்கி பயின்று வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த வாரம் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நாகம்மாள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக தங்கிப் பயிலும் ஆறு மாணவர்களையும் தலைமை ஆசிரியர் பள்ளியில் உள்ள சேர் ,பெஞ்ச் நாற்காலிகளை தூக்கி கொண்டு வரச் சொல்லியுள்ளார் அதேபோல் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முடிந்தவுடன் மழையில் நனைந்தபடி மாணவர்கள் மீண்டும் நாற்காலிகளை பள்ளிக்கு தூக்கிச் சென்றுள்ளனர் இதன் வீடியோ கடந்த வானம் சமூக வலைதளங்களிலும் பரவியது. மாணவர்களை அரசு நிகழ்ச்சிக்காக பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மீதும் மற்றும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்போறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் உத்தர பாண்டி புகார் மனு வழங்கினார் மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்டமாக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

Similar News