அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு;
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதுகலை படிக்கும் மாணவன் சஞ்சய் சேலம் பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்று தமிழகத் துணை முதல்வரிடம் ஊக்க தொகை பெற்றார். அதனை கொண்டாடும் விதமாக நேற்று திங்கட்கிழமை மாலை கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் கண்ணன் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாணவனுக்கு வழங்கி வாழ்த்தினார் உடன் பேராசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.