கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது
கோபிநாதம்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவர் கைது 200 கிராம் கஞ்சா பறிமுதல்;
தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் காவலர்கள் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜம்மன அள்ளி பகுதியில் சென்றபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த முதியவரை பிடித்து சோதனையிட்டனர். இதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த குள்ளன் வயது 60 என்பதும், கஞ்சா பதுக்கி விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, காவலர்கள் கைது செய்தனர். 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது குறித்து காவலர்கள் இன்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.