அதிமுக கூட்டம் நடைபெறும் இடத்தை மு. அமைச்சர் ஆய்வு
தர்மபுரி நகரப்பகுதியில் அதிமுக கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சர் ஆய்வு;
தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அக்டோபர் 2 தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என எழுச்சி பயணம் மற்றும் நகர பகுதியில் பொதுமக்களுடன் உரையாடும் பகுதிகளில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சரும் தர்மபுரி மாவட்ட செயலாளர் கேபி அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களுக்கும் தொண்டர்களும் பாதுகாப்பான முறையில் இருக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தினர் உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.