நாமக்கல்லில் நாளை பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில் இலவச மருத்துவ முகாம்!
நாமக்கல்லில் அகில இந்திய கட்டுநர் சங்கம் (நாமக்கல் மையம்) மற்றும் திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து இந்த இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றனர்.;
நாமக்கல் - துறையூர் சாலை என்.கொசவம்பட்டி , கவரா நகரில் உள்ள சுயராஜ்ஜீயா தொடக்க பள்ளியில் நாளை(அக்டோபர் 26) ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாமை அகில இந்திய கட்டுநர் சங்கம் நாமக்கல் மையம் மற்றும் திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்துகின்றன.இந்த இலவச மருத்துவ முகாமில் பொது மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மகளிர் நல மருத்துவம் கண் பரிசோதனை பொது அறுவை சிகிச்சைக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு 89259 32016 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.