பரமத்திவேலூர் வேளாண் சந்தையில் ரூ.1 ½ லட்சத்திற்கு தேங்காய் ஏலம்.

பரமத்திவேலூர் வேளாண் சந்தையில் ரூ.1 ½ லட்சத்திற்கு தேங்காய் ஏலம் போனது.;

Update: 2025-04-09 15:19 GMT
பரமத்திவேலூர் வேளாண் சந்தையில் ரூ.1 ½ லட்சத்திற்கு தேங்காய் ஏலம்.
  • whatsapp icon
பரமத்திவேலூர், ஏப்.9: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் மின் னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.1.48 லட் சத்திற்கு தேங்காய் விற்ப னையானது. பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங் காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 950 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.57.29-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 38.41-க்கும், சராசரியாக ரூ.56.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.47 ஆயிரத்து 550-க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரம் கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.60.19-க்கும், குறைந்த பட்சமாக ரூ.44.29- க்கும், சராசரியாக ரூ.57.57-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 99-க்கு ஏலம் நடை பெற்றது.

Similar News