பூண்டி பொன்னெழில் நாதர் ஜெயின் கோவிலில் 108 கலச ஜலாபிஷேக விழா.
ஆரணி அடுத்த பூண்டி பொன்னேழில் நாதர் கோவிலில் 108 கலச ஜலாபிஷேகம் நடைபெற்றது..;
ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சி பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான பொன்னேழில் நாதர் ஜெயினர் கோயிலில் 108 கலச ஜலாபிஷேக விழா நடைபெற்றது. ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியைச்சேர்ந்த பூண்டி பொன்னெழில் நாதர் ஆலயத்தில் வருடந்தோறும் 'தை' ஐந்தாம் நாள் காணும் பொங்கல் ஆராதனை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தை 5ம் நாள் முன்னிட்டு சுவாமிக்கு 108 கலச ஜலாபிஷேகம் நடைபெற்றது. மேலும் பொன்னேழில் நாதர், பார்சுவநாதர், பாகுபலி, சர்வானஎச்சன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு கோவிலை ஊர்வலமாக சுற்றி வந்தனர். பின்னர்.சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம், பால், பழம், இளநீர், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் 108 பெண்கள் சுவாமிகளுக்கு ஜலாபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் திருமலை தவளகீர்த்தி சுவாமிகள், சித்தாமூர் லட்சுமி சேனாபட்டராக சுவாமிகள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் தலைவர் நேமிராஜ் மற்றும் பூண்டி பகுதி ஜெயினர்கள் செய்திருந்தனர்.