சட்டவிரோதமாக மது விற்றவர் கைது:116 மதுபாட்டில்கள் பறிமுதல்!

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 116 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது;

Update: 2025-03-29 13:18 GMT
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது:116 மதுபாட்டில்கள் பறிமுதல்!
  • whatsapp icon
கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 116 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக மது விலக்கு காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து கோவில்பட்டி மதுவிலக்கு காவல்துறையின் இன்ஸ்பெக்டர் மீகா தலைமையில் மற்றும் மதுவிலக்கு காவலர்கள் ஆகியோர் அடங்கிய கோவில்பட்டி காவல்துறை உட்கோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் கோவில்பட்டி ஜோதி நகரைச் சார்ந்த செல்லையா மகன் மாடசாமி (50) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது அவரை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மீகா தலைமையில் போலீசார் கைது செய்து 116 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News