கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 2 பேர் கைது!

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 2 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்தனர்

Update: 2024-12-25 02:23 GMT
கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலை தொடர்ந்து மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்பாண்டியன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த கல்லத்தியான் என்பவர் போலீசாரை பார்த்ததும் போலீசார் மீது கற்களை வீசி தப்பித்து ஓட முயன்றுள்ளார்.  போலீசார் சுற்றி வளைத்து கல்லத்தியானை கைது செய்தனர். இதே போன்று கோவில்பட்டி நடராஜபுரம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த  சாலைப் புதூர் இ.பி.காலனியை சேர்ந்த செண்பகராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News