பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி!
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான "உன்னால் முடியும்" எனும் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான "உன்னால் முடியும்" எனும் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி இன்று நடைபெற்றது. கி. பி. 1951 ஒன்றாம் ஆண்டு அனைவருக்கும் தரமான கல்வியை தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் குலபதி ஏபிசி வீரபாகு அவர்களால் துவங்கப்பட்டு கடந்த 74 ஆண்டுகள் கடந்து கல்வி சேவையாக மட்டுமே வழங்கி வரக்கூடிய வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பவள விழாவின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த ஏறத்தாழ 17 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 235 மாணவ மாணவியர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். இதில் +2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான வழிகாட்டுதல் பயிற்சியும், மருத்துவக் கனவோடு பயில்கின்ற மாணவ மாணவியருக்கான நீட் மாதிரி தேர்வும் நடைபெற்றது. துவக்க விழாவில் தலைமை உரையாற்றிய வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு இந்நிகழ்விற்கு அனுமதி அளித்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாணவ மாணவியர்களை நிகழ்வில் பங்கு பெறச் செய்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மாணவமாணவியர்களை நிகழ்வுக்கு அழைத்து வந்த ஆசிரியர் பொறுப்பாளர்கள் மற்றும் மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார். மேலும் வ.உ. சிதம்பரம் கல்லூரியின் வரலாற்றில் சமூகத்தின் மேம்பாட்டிற்காக மாணவ மாணவிகளின் வளர்ச்சிக்காக என்னென்ன நிகழ்வுகள் நடைபெற்று உள்ளது என்பதை பற்றியும் விளக்கி கூறினார். மேலும் வருகின்ற 6.4.25 ஞாயிற்றுக்கிழமை பண்ணிரெண்டாம் வகுப்பை முடித்த மாணவ மாணவியர்கள் தொடர்ந்து கல்லூரி படிப்பை தெரிவு செய்வதற்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற உள்ளது என்றும் கூறினார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை வ. உ.சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் முனைவர். சொ.வீரபாகு அவர்கள் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் செய்திருந்தனர்.