குமரி மாவட்டம் ராஜக்மங்கலம் அருகே பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (43) கார் டிரைவர். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ரெண்டு பேர் ஒரு ஆட்டை தூக்கி செல்ல முயன்றனர். அப்போது காரில் வந்த முத்துக்குமார் ஆடு திருடுவதை கண்டு சத்தம் போட்டார். இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி சென்றனர். முத்துக்குமார் நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் சேர்ந்து பழவி ளையில் பைக் ஓட்டி வந்த திருடர்களை தடுத்து நிறுத்தி, ராஜகமங்கலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் வருவதற்குள் ஒருவர் பொதுமக்களின் படியில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதை எடுத்து போலீசார் பிடிபட்டவரிடம் விசாரித்தபோது வேம்பனூர் பகுதியை சேர்ந்த முத்து குமார் (37) என்பதும், தப்பி ஓடியது சிவசங்கரன் என்பது தெரிந்தது. போலீசார் முத்துக்குமார் கைது செய்து செய்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த சிவசங்கரையும் போலீசார் கைது செய்தனர்.