சேலம் அன்னதானப்பட்டி போலீசார் தாதகாப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூணாங்கரடு தண்ணீர் டேங்க் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாதகாப்பட்டி சண்முக நகரை சேர்ந்த தாமோதரன் (வயது 25), சபரிநாதன் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர்.