திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.22.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல் எம்பி தொடங்கி வைத்தார்..
திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.22.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல் எம்பி தொடங்கி வைத்தார்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் மகளிர் நல விடுதியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் தனது பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.22.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் இணைப்பிற்கான பயன்பாட்டினை துவக்கி வைத்தார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார், மாணவிகள் இடையே பேசுகையில், சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் பெண்கள் சமூக வலைதளங்களில் உள்ள நண்பர்கள், நல்லவர்களா,தீயவர்களா, என அறிந்த பின்பு பழக வேண்டும் எனவும், சமூக வலைதளங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும், கவனமாக நீங்கள் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் உங்களுக்கு இங்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளும் உள்ளதா, வேறு ஏதாவது அடிப்படை வசதிகளை கேளுங்கள் செய்து தர தயாராக உள்ளோம். மேலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் யார் யார் என்றும், அனைவரும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தொகை வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். அதேபோல கல்லூரி பெண்கள் பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் ஆகியவை மட்டும் நம்பி செயல்பட வேண்டும், அவர்கள் சொல்படி கேட்டு நல்ல முறையில் தேர்வில் வெற்றி பெறவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் அட்மா குழு தலைவர் திமுக ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், கல்லூரி முதல்வர்(பொறுப்பு) முனைவர் ஆர்.சிவகுமார், வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் சி.நாகூர் செல்வம் ஆங்கிலத் துறைத் தலைவர் பெ.மைதிலி இயற்பியல் துறைத் தலைவர் எம்.கே.சுப்ரமணியன்,கணினி அறிவியல் துறைத் தலைவர் சுரேஷ்பாபு, கணிதத் துறைத் தலைவர் முனைவர்.கிருபா தேவி, தாவரவியல் தலைவர் செங்கோட்டு வேல், விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் சேகர், தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கலைச்செல்வி, உடற்கல்வி இயக்குனர் முனைவர் வெண்ணிலா, இணைப் பேராசிரியர்கள் ப.பிரகாஷ், அய்யன்துரை, உள்ளிட்ட பல பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.