அண்​ணாநகரில் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு மேலும் ரூ.3 லட்​சம் நிவாரண​மாக வழங்க அரசுக்கு உத்​தரவு

சென்னை அண்​ணாநகரில் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ஏற்​கெனவே ரூ.1 லட்​சம் வழங்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மேலும் ரூ. 3 லட்​சத்தை இடைக்​கால நிவாரண​மாக 4 வார காலங்​களில் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.;

Update: 2025-03-18 15:23 GMT
அண்​ணாநகரில் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு மேலும் ரூ.3 லட்​சம் நிவாரண​மாக வழங்க அரசுக்கு உத்​தரவு
  • whatsapp icon
சென்னை அண்​ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு​வர் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​டார். இதுதொடர்​பாக புகார் அளிக்​கச் சென்ற பெற்​றோரை, அண்​ணாநகர் அனைத்து மகளிர் போலீ​ஸார் தாக்​கியது தொடர்​பாக, தாமாக முன்​வந்து விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இந்த வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், சிபிஐ விசா​ரணைக்கு தடை விதித்​து, இந்த சம்​பவம் தொடர்​பாக சென்னை பெருநகர காவல் இணை ஆணை​ய​ராக பதவி வகித்த சரோஜ்கு​மார் தாக்​கூர் தலை​மை​யில் ஆவடி சட்​டம் - ஒழுங்கு துணை ஆணை​யர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்கு துணை ஆணை​யர் பிருந்தா ஆகியோர் அடங்​கிய சிறப்பு புல​னாய்வு குழுவை அமைத்து உத்​தர​விட்​டது. இந்த குழு, தனது விசா​ரணை அறிக்​கையை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்​ளது. சிறுமி​யின் வாக்​குமூலத்தை பொது​வெளி​யில் கசியவிட்​டது தொடர்​பாக மற்​றொரு சிறப்பு விசா​ரணைக்​குழு விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு இடைக்​கால நிவாரணம் வழங்​கு​வது குறித்து உயர் நீதி​மன்​றம் முடி​வெக்க உச்ச நீதி​மன்றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்​தது. அதன்​படி பாதிக்​கப்​பட்ட சிறுமி​யின் தாயார் இழப்​பீடு கோரி தாக்​கல் செய்​திருந்த மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் ஆர்​.சுப்​பிரமணி​யன், ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்தது. அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ராஜ்​திலக், பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ஏற்​கெனவே ஒரு லட்ச ரூபாய் இழப்​பீடு வழங்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது மேலும் ரூ. 3 லட்​சம் மேலும் இடைக்​கால நிவாரண​மாக வழங்க அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது எனக்​கூறி அதை தாக்​கல் செய்​தார். அதை பதிவு செய்து கொண்ட நீதிப​தி​கள், சிறுமிக்கு இடைக்​கால நிவாரண​மாக இந்த ரூ.3 லட்​சத்தை 4 வார காலத்​துக்​குள் தமிழக அரசு வழங்க வேண்​டும் என உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.

Similar News