இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
திண்டுக்கல் நகர் பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது, 2 இருசக்கர வாகனங்கள் மீட்பு;

திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் இரு சக்கர வாகனம் திருட்டு தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் DSP.குமரேசன் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் சரத்குமார் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த பிரகாஷ்(36), விவேக்ராஜா(27), திண்டுக்கல்லை சேர்ந்த தாமரைக்கண்ணன்(21)_ பாண்டியராஜன்(19) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.