பனையில் கள் இறக்கி விற்பனை செய்தவர் கைது - 40லிட்டர் கள் பறிமுதல்

கோவில்பட்டி அருகே பனையில் கள் இறக்கி விற்பனை செய்தவர் கைது - 40லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2025-04-21 15:16 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பரம்பட்டி கிராம பகுதியில் கள் விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப் படை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சிதம்பரம்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுப்பையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (42) என்பவர் குத்தகைக்கு பனை மரங்கள் எடுத்து பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகிறார். அவரிடம் தனிப்படை போலீசார் சோதனை செய்த போது, அவரிடம் 2 பிளாஸ்டிக் குடத்தில் 40லிட்டர் கள் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார்,, அவரையும், கள் இருந்த குடங்களை நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Similar News