குமரி மாவட்டம் அழிக்கால் பகுதியை சேர்ந்த 43 வயது மீனவர் ஒருவர் கணபதிபுரத்தில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீனவரின் 13 வயது மகள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த மீனவர் மகள் என்றும் பாராமல் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரய்யா நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் மகளுக்கு பாலில் தொந்தரவு கொடுத்த மீனவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.