ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆலயத்தில் கிருஸ்துமஸ் சிறப்பதிருப்பலி 5000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிராத்தனை...*
ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆலயத்தில் கிருஸ்துமஸ் சிறப்பதிருப்பலி 5000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிராத்தனை...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆலயத்தில் கிருஸ்துமஸ் சிறப்பதிருப்பலி 5000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிராத்தனை... உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆலயத்தில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது. இயேசுகிருஸ்து பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொண்டாடப்படு வருகின்றனர். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் டிச.30 ஆம் தேதி வரை வீடுகளில் மாட்டு தொழுவம் போன்ற அமைப்புகள் கிருஸ்துமஸ் மரம் உள்ளிட்டவைகளை வீடுகளில் அலங்கரித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆலயத்தில் கிருஸ்துமஸ் சிறப்பு திருப்பலி வழிபாடு வெகு விமரிசையாக கொண் டாடப்பட்டது பெத்தலேகத்தில் இயேசு கிருஸ்து குழந்தையாக பிறந்தது குடியலில் வைக்க கொண்டு செல்லும்போது அதை அனைவரும் தொட்டு வணங்கி பிரார்த்தனை செய்தனர் பின்னர் குடியலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாய் ஏராளமானோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை சந்தன சகாயம் தலைமையில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. முடிவில் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.