ராசிபுரம் அருகே இடுகாட்டில் ஒரே இடத்தில் 6 மண்டை ஓடுகளை வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் மனிதர்களை கொலை செய்து எரிக்கப்பட்டதா?மாந்திரீகம் செய்யப்பட்டதா என்பது குறித்து காவல்துறையின
ராசிபுரம் அருகே இடுகாட்டில் ஒரே இடத்தில் 6 மண்டை ஓடுகளை வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் மனிதர்களை கொலை செய்து எரிக்கப்பட்டதா?மாந்திரீகம் செய்யப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை...;

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் பகுதியில் வயதான பெண் ஒருவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் இடுகாட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இடுகாட்டில் சுமார் 6 மனித மண்டை ஓடுகள் எரிந்த நிலையிலும் மற்றும் அதன் அருகில் அரிவாள்,ஆணி மாந்திரீகம் படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சந்தேகத்திற்கு இடமாக இருந்த நிலையில் இடுகாட்டில் இருந்த நபர்கள் புதுச்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே இடத்தில் 6மனித மண்டை ஓடுகள் இருந்து நிலையில் மனிதர்களை கொலை செய்து எரிக்கப்பட்டனரா? அல்லது மாந்திரீகம் செய்வதற்காக இடுகாட்டில் இருந்து மண்டை ஓடுகளை எடுத்து பூஜை செய்தனரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது சம்பவ இடத்தில் ஏ எஸ் பி ஆகாஷ் ஜோசி இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தற்போது இடுகாட்டில் ஒரே இடத்தில் 6மண்டை ஓடுகள் இருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..