தலைமறைவாக இருந்த குற்றவாளியை சென்னையில் கைது

வத்தலகுண்டுவில் கஞ்சா வழக்கில் 3 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சென்னையில் கைது செய்த வத்தலகுண்டு போலீசார்;

Update: 2025-03-26 10:15 GMT
தலைமறைவாக இருந்த குற்றவாளியை சென்னையில் கைது
  • whatsapp icon
திண்டுக்கல், வத்தலகுண்டு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு 3 கிலோ கஞ்சா விற்பனை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பெரம்பலூரை சேர்ந்த குமார் மகன் விஜயகுமார் என்பவர் தலைமறைவாக இருந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சென்னையில் பதுங்கி இருந்த விஜயகுமாரை கைது செய்து வத்தலகுண்டு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News