போலி மைக்ரோ பைனான்ஸ் நடத்தி 60 லட்சம் மோசடி செய்த நபர் கைது
தரங்கம்பாடியில் கடந்த 26ஆம் தேதி இரவு மாசிலாமணி நாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பொறையார் ரோட்டரி சங்க ங்க தலைவர் மன்னனை ஊத்தி எரிச்சலில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே விநாயகர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான அருண்குமார் வாடகை பாத்திர கடை நடத்தி ஜோசியமும் பார்த்து வந்துள்ளார். பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக பொறுப்பு வகித்திருந்தார். அருண்குமார் தரங்கம்பாடி கடற்கரையில் பழமை மிக்க மாசிலாமணி நாதர் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் அருண்குமார் கோவில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது திடீரென உடல் முழுவதும் தீக்காயத்துடன் கோயில் வாசலில் வந்து விழுந்தார் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருந்தனர். அவரிடம் பொறையார் போலீசார் விசாரிக்கையில், நான் இந்த நிலைமைக்கு உள்ளாகக் காரணம் தனது கடையின்உரிமையாளர் ராஜ்குமார் தான் காரணம் என்று சொல்லியிருந்தார். பொறையார் போலீசார் ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர். ராஜ்குமார் இடத்தில் வாடகை பாத்திர கடை மற்றும் ஜோசியம் தொழில் செய்து வந்த அருண்குமார் இடத்தை காலி செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறியதால் ராஜ்குமார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கருதி அவரை கைது செய்தனர். விசாரணையில் முகாந்திரம் எதுவும் இல்லாததால் ராஜ்குமாரை பொறையார் போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமைஇரவு 8:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருண்குமார் உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பொறையார் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.