கன்னியாகுமரி மாவட்ட ராஜாக்கமங்கலம் காவல் நிலைய போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கனிமவளத்துறையின் எந்தவித அனுமதிச்சீட்டும் இன்றி சட்டவிரோதமாக கனிம வளம் ஏற்றி வந்த 2 கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தக்கலை உட்கோட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அதிக பாரம் ஏற்றி வந்த ஒரு கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை 4 நான்கு பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என எஸ் பி ஸ்டாலின் கூறினார்.