எனக்கு வயது 75: ஆனால் ஆதார் அட்டை 31 வயசுனு சொல்லுது
சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த 75 வயதான மூதாட்டி ஒருவர் ஆதார் அட்டையில் பிறந்த வருடத்தை 1994 என தவறாக அதாவது 31 வயது ஆகிறது என்பது போல் குறிப்பிடப்பட்டுள்ளதால் முதியோர் உதவித்தொகை பெறமுடியாமல் தவிக்கிறார்.;
பெரம்பலூர் மாவட்டம் கிழப்புலியூர் தெற்கு சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி தெய்வானை. 75 வயதான இவருக்கு பிள்ளைகள் இல்லை என கூறப்படுகிறது.இவரது ஆதார் அட்டையில் பிறந்த தேதி 01.01 4 என அச்சிடப்பட்டுள்ளது. தாவது 75 வயதான மூதாட்டிக்கு 3. வயது என காட்டுகிறது.இதனால் தெயானையால் அரசு முதியோர் உதவித்தொகை பெற முடியாமல் தவிக்கிறார்.ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றச்சென்றால் கல்விச்சான்று கேட்கிறார்கள் எனக்கூறும் மூதாட்டி, நான் கல்விச்சான்றுக்கு எங்கே போவேன் என அப்பாவியாக கேட்கிறார். கவனிப்பாரின்றி இருக்கும் தனக்கு முதியோர் உதவித்தொகை கிடைத்தால் போதும் என நினைத்தால் ஆதார் அட்டையில் தவறாக அச்சிடப்பட்ட பிறந்த தேதி தடையாக இருப்பதாக கூறுகிறார். எனவே, எனது ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றம் செய்து முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.