தஞ்சையில் தொடர்ந்து நடைபெறும் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைபயிற்சி
நடை பயிற்சி;

தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஆரோக்கிய நடைபயிற்சியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில், சுகாதாரத் துறை சார்பில் இரத்த அழுத்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் துவங்கப்பட்ட நடப்போம் நலம்பெறுவோம் என்கின்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தினை தொடரும் வகையில், மாதந்தோறும் முதல் ஞாயிறன்று 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைபயிற்சியை தஞ்சை சத்தியா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை நடைபெற்ற ஆரோக்கிய நடைபயிற்சியை சத்யா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர்கள் சங்க கௌரவ தலைவரும், சத்ய விழா குழு தலைவருமான து.செல்வம் துவக்கி வைத்தார். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சிங்காரவேலு முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, சத்தியா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பார்த்தசாரதி, உள்ளிட்ட நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் என ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்று புதியபேருந்து நிலையம் வரை சென்று, மீண்டும் அதே வழியாக சத்யா விளையாட்டு திடலை வந்தடைந்தனர். சுகாதார துறை சார்பில் அனைவருக்கும் இரத்த அழுத்த சோதனை நடைபெற்றது. நிறைவாக உடல்நலம், மனநலத்தை காக்கும் நடைபயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆரோக்கிய சிற்றுண்டியான சுண்டல், தேநீர் வழங்கப்பட்டது. இதே போல் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் "ஹெல்த் வாக்" திட்டம் தொடரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.