தாராபுரம் அருகே சொகுசு காரில் கஞ்சா கடத்திய ஐந்து நபர்கள் கைது –8.கிலோ கஞ்சா பறிமுதல்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் பகுதியில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய ஐந்து நபர்கள் கைது –8.கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2025-03-29 15:23 GMT
தாராபுரம் அருகே சொகுசு காரில் கஞ்சா கடத்திய ஐந்து நபர்கள் கைது –8.கிலோ கஞ்சா பறிமுதல்!
  • whatsapp icon
தாராபுரம் வழியாக கஞ்சா கடத்த இருப்பதாக குண்டடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் அந்த திருப்பூர்- கோவை செல்லும் புறவழிச் சாலை காவல் நிலைய செக்போஸ்ட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், 8,கிலோ கஞ்சா பொட்டலமாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், வாணியம்பாடி மோகன் மகன் பாஸ்கரன்.36 திருப்பத்தூர் மந்திரம் மகன் சுந்தர் வயது 24. சேதி நல்லூர் தூத்துக்குடி ராஜா மகன் புவனேஷ்வரன் வயது 26 தேனி பெரியகுளம் பொன்னையா மகன் சச்சின் வயது 20 தேனி பெரியகுளம் திருமலை தம்பி மகன் முருகேஷ் வயது 30 ஆகிய ஐந்து பேர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக குண்டடம் போலீசார்.Ford Fiesta TN 69 L 0651 என்ற சொகுசு காரையும் மறைத்து வைத்திருந்த எட்டு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர் இவர்களிடம் விசாரணை செய்ததில் தேனி மாவட்டத்தில் கஞ்சாவை வாங்கி கோவை திருப்பூர் போன்ற பகுதிகளில் விற்பனை செய்ய வந்த போது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அவரிடம் விரிவான விசாரணையை போலீசார் மேற்கொண்டு தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News