மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் ராசிபுரத்தில் தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் சிறைபிடிப்பு.

மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் ராசிபுரத்தில் தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் சிறைபிடிப்பு.;

Update: 2025-07-05 12:23 GMT
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாமக்கல் வடக்கு அதன் பகுதி அலுவலகமான ராசிபுரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு E.S முருகேசன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு A.செல்வகுமார் அவர்கள், ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மங்களபுரம், ஆகிய பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது இதில் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட 3 டாட்டா ஏஸ் வாகனமும், 1 பயணியர் ஆட்டோ ரிக்க்ஷா வாகனமும் சிறைபிடிக்கப்பட்டு ஆயில் பட்டி காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதேபோன்று தகுதி சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட 3 டாட்டா ஏஸ் வாகனம் மற்றும் 1 கனரக சரக்கு வாகனம் சிறைபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் ராசிபுரத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இச்சிறப்பு தணிக்கையின் மூலம் அரசுக்கு சுமார் 1.60 லட்சம் இணக்கக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது போன்ற சிறப்பு வாகன தணிக்கை ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெண்ணந்தூர், மங்களபுரம் , ஆயில்பட்டி, நாமகிரிப்பேட்டை போன்ற பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு E.S முருகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News