நீலகிரி மாவட்ட திமுக சார்பில் முரசொலி மாறன் அவர்களின் 92–வது பிறந்தநாள் விழா

கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்;

Update: 2025-08-18 16:38 GMT
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் முரசொலி மாறன் அவர்களின் 92–வது பிறந்தநாள் விழா முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சி, முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு முரசொலி மாறன் அவர்களின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் முரசொலி மாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவை தலைவர் போஜன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி இஸ்மாயில், உதகை மேற்கு நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, ரஹமத்துல்லா, உதகை நகரமன்ற உறுப்பினர் கஜேந்திரன், கிளை கழக நிர்வாகிகள் ஸ்டான்லி, ரஞ்சித், ராஜ்குமார், பாபுராஜ் உட்பட கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Similar News