கோவை சாலை பழுது கோரிக்கை – BJP போராட்டம், கைது !
நெடுஞ்சாலை மோசமான நிலையில் இருப்பதை கண்டித்து, BJP தொண்டர்கள் மண்ட பத்திரம் போராட்டம் நடத்தினர்.;
கோவை சக்தி சாலையில் இருந்து காளப்பட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் வரை நடந்துவருவதாக குற்றம் சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று நூதன போராட்டம் நடத்தினர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் “மண்ட பத்திரம்” என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க அவர்கள் முயன்றனர். இதன் போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை சரவணம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். இந்தச் சாலை உடனடியாக பழுது பார்க்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.