100%வாக்குபதிவு: திருநங்கைகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கடிதம்
தேனியில் 100%வாக்குபதிவை வலியுறுத்தும் வைகியில் திருநங்கைகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கடிதம் எழுதியுள்ளார்.;
கடிதம் அனுப்பும் பணி
தேனி மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திருநங்கைகளின் முகவரிக்கு அஞ்சல் அட்டைகளின் மூலம் கடிதம் எழுதி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தேர்தல் விழிப்புணர்வு பணிகளை இன்று (22.03.2024) மேற்கொண்டார்.
தேனி மாவட்டத்தில் 100% வாக்களிப்பை பதிவு செய்வதற்காக பல்வேறு விதமான தொடர் விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, தேனி மாவட்டத்தில் பதிவு பெற்ற 113 திருநங்கைகள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் அஞ்சல் அட்டையில், ‘’எனது அன்பார்ந்த திருநங்கைகளே, திருநம்பிகளே மாற்றம் ஒன்றே மாறாதது. ஆம், தேசத்தின் மாற்றத்தை - ஒரு கைவிரலால் மாற்ற முடியும் என்றால் அது நமது வாக்குரிமையால் மட்டுமே, தேசத்தின் மாற்றம் உங்கள் கைவிரல்களிலும்,
வாக்களிக்க தயாராகுங்கள் என்று கடிதம் எழுதி தபால் மூலம் அனுப்பி விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டார்.