1,723 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.155.74 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளையும், 16,683 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையையும் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.;

Update: 2025-09-20 17:22 GMT
திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,723 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.155.74 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளையும், 16,683 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையையும் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.

Similar News